சேமிப்பு பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி
1-ம் வகுப்பு படிக்கும் சிறுமி உண்டியலில் சேமித்து வைத்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
தென் தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கிருக்கும் மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் மட்டுமின்றி நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி கேர்கம்பையை சார்ந்த ரகுநாதன் சபரிதா தம்பயினரின் மகள் சஷ்விதா(5) என்ற சிறுமி தான் கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்த தொகையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளார்.
கேகரம்பை அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் அவர் தனது உண்டியலுடன் உதகைக்கு வந்து மாவட்ட ஆட்சியரை சந்திதது வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் பள்ளிச் சிறுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்து திருக்குறள் புத்தகத்தையும் சாக்லெட்டுகளையும் பரிசாக வழங்கினார்.