மேட்டூரில் தற்காப்பு கலை செய்து அசத்திய சிறுமி

மேட்டூரில் தற்காப்பு கலை செய்து சிறுமி அசத்தினார்.;

Update: 2024-01-09 02:04 GMT

தற்காப்பு கலை செய்து காட்டிய சிறுமி

மேட்டூரை சேர்ந்தவர்கள் தங்கராஜ், அபிராமி தம்பதியினர். இவர்களது மகள் தமிழினி(10) தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2 1/2-வயது முதலே கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்று வருகிறார்.

தமிழினி உலக அளவில் 230 கராத்தே போட்டியில் கலந்து கொண்டு 200 போட்டிகளில் முதல் பரிசை வென்றுள்ளார். கடந்த மாதம் நேபாளத்தில் நடந்த கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளர். இவர் வென்ற பரிசுகளும், இளம் மாமணி பட்டங்களும், இந்தியா ரெக்கார்ட்ஸ் பதிப்புகளும் மேடையை அலங்கரித்தது.

Advertisement

இந்நிலையில் இன்று மாதையன் குட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட், இந்தியன் அச்சீவர்ஸ் ஆப் ரெக்கார்டு உள்ளிட்ட 10 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சிக்காக அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், கராத்தே மற்றும் சிலம்ப வல்லுநர்கள் முன்னிலையில் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் ,கராத்தே, வால் வீச்சு, சுருள் வீச்சு, மான் கொம்பு, சர்க்கரை பந்தம் ,கைப்பந்து ஆகிய தற்காப்பு கலைகளை செய்து அசத்தினார். நிகழ்ச்சியின் முடிவில் சிறுமி தமிழினிக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News