அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணி கால தாமதத்திற்கு அரசு காரணமல்ல
அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் கால தாமத்திற்கு அரசோ , அதிகாரிகளோ காரணமில்லை, தற்போது பவானி ஆற்றில் 160 கனஅடி மட்டுமே நீர் வருவதாகவும் , என்றைக்கு 400 கன அடி வருகிறோ அப்போது முதல்வர் துவக்கி வைப்பார் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை மற்றும் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி , அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை பொறுத்தவரை அத்தனை பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு , இத்திட்டத்திலுள்ள 1045 குளங்களும் தண்ணீர் முழுமையாக செலுத்தி சோதனை ஓட்டமும் முடிந்துவிட்டது . 400 கன அடி வந்தால் மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும் சூழ்நிலையில் தற்போது பவானி ஆற்றில் 160 கனஅடி மட்டுமே நீர் வருவதாகவும் , என்றைக்கு 400 கன அடி வருகிறோ அப்போது முதல்வர் துவக்கி வைப்பார் .அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் கால தாமத்திற்கு அரசோ , அதிகாரிகளோ காரணமல்ல என்றார்.