கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சோகம்
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் சில நிமிடங்களில் மனைவியும் இறந்ததால் சோகம்
Update: 2024-02-21 09:02 GMT
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட இடைக்கழி நாடு பேரூராட்சியில் உள்ள முருங்ககாடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹிமான் வயது 90. இவர் வயது மூப்பின் காரணமாக இன்று காலை இறந்துவிட்டார். கணவர் இறந்த செய்தியைக் கேட்ட அவரது மனைவி ஐமால் பிவி வயது 70. இவரும் துக்கம் தாங்காமல் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்..வயதான காலத்திலும் பாசத்தோடு ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடைசி காலத்தில் சாவிலும் இணைபிரியாமல் மறைந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இவர்களது உடல்களை ஒன்றாக சேர்த்து அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை செய்தனர்.. இதனைத் தொடர்ந்து இருவரது உடல்களையும் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர் இடுகாட்டில் இஸ்லாமிய முறைப்படி இறுதி அடக்கம் செய்தனர்.. வாழ்வில் சந்தோஷம் துக்கம் போன்றவற்றில் மட்டும் ஒன்று சேர்ந்து தங்களது வாழ்க்கையை சிறப்பாக நடத்தியவர்கள் வயதான காலத்தில் ஒன்றாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.