தி. மலையில் அதிமுக சார்பில் இலவச தண்ணீர் பந்தல் திறப்பு
தெள்ளார் ஒன்றிய கழக அதிமுக சார்பில் இலவச தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 14:53 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றிய கழக அதிமுக சார்பில் பிடிஓ அலுவலகம் அருகில் இலவச தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் ,இளநீர்,பழரசம் ,நீர், மோர் ஆகியவற்றை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டார். அப்போது ஒன்றிய செயலாளர் தாங்கல் தனசேகர் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார்,கண்ணியப்பன்,பகவதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.