50 நாட்கள் கடந்து நீர் மோர் வழங்கி வரும் நில முகவர் சங்கத்தினர்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நில முகவர் சங்கம் சார்பில் 50 நாட்கள் கடந்தும் நீர் மோர் வழங்கி வருகிறார்கள்.;
Update: 2024-05-15 01:47 GMT
நீர்மோர் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 50வது நாள் நீர் மோர் வழங்கும் விழா தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது. தினம் ஒரு உறுப்பினர் எனும் வகையில் இங்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் சொத்து பத்திரப்பதிவு, ஈ.சி. போடுதல், வீடு, இடம் அடமானம் பத்திரம் பதிவு என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். கடும் கோடை வெப்பம் காரணமாக, இங்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பிரதான சாலைக்கு வந்தால்தான் உணவு விடுதி, டீக்கடை உள்ளிட்ட கடைகள் உள்ளன. அதனால் பொதுமக்களின் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமில்லாமல், பத்திர எழுத்தர்கள், பத்திர எழுத்தர் அலுவலக உதவியாளர்கள் என பல தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர்.