தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட பயிற்சி டாக்டர் கடிதம்
பயிற்சி டாக்டர் எழுதிய கடிதம் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது
Update: 2023-11-29 11:43 GMT
குமரி மாவட்டம் குலசேகரத்தில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தூத்துக்குடி சேர்ந்த சுகிர்தா என்பவர், தன்னுடைய சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம், பயிற்சி மருத்துவர்கள் பிரீத்தி, ஹரிஸ் ஆகியோர் காரணமென்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்தார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பின்னர் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும் நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஹரிஷ், ப்ரீத்தி இருவரும் விசாரணை ஆஜரானார்கள். அவர்களிடம் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காட்டி விசாரணை மேற்கொண்டனர். சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை மதுரை வட்டார தடயவியல் அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணையை சிபிசிஐடி போலீஸ் தீவிரப்படுத்தி உள்ளது.