சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் சாதனை

மருத்துவராக வேண்டும் என்ற மகளின் கனவிற்கு உதவி செய்திட வேண்டி தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-06 14:30 GMT

மருத்துவராக வேண்டும் என்ற மகளின் கனவிற்கு உதவி செய்திட வேண்டி தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை:தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டியன் சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி லோடு ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அதில் மூத்த மகள் ஸ்ரீ ராஜலட்சுமி. கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். நடைபெற்று முடிந்த பொது தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதோடு 600 க்கு 560 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி கூறும் போது தான் படிக்க மிகவும் உதவிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தன்னுடைய வெற்றிக்கு பின் தனது தாய் முருகேஸ்வரி இருப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவராக வேண்டும் என்பதே தனது கனவு எனும் கூறிய அவர் நீட் தேர்வு நல்லபடியாக எழுதியுள்ளதாகவும் மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அம்மாணவியின் தாயார் கூறுகையில் தனது மகளை அவளது விருப்பம் போல் மருத்துவம் படிக்க வைக்க ஆசை எனவும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள தங்களுக்கு யாரேனும் உதவி புரிய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
Tags:    

Similar News