மணவாளக்குறிச்சி : கோவிலில் குத்துவிளக்குகள் திருடியவர் கைது

Update: 2023-12-04 03:07 GMT
கைதான ராஜகுமார்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளை  என்ற இடத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.  நேற்று காலையில் பூசாரி வந்த போது,  கோயில் கிரில் கேட் உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த 2 பெரிய மற்றும் 2 சிறிய குத்து விளக்குகள் திருடப்பட்டு இருந்தது.   இது குறித்து கோவில் தலைவர் பொன்னையா (69) என்பவர்  மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.   இந்த நிலையில்,  குளச்சல் துறைமுகப் பகுதியில் சந்தேகப்படும் வகையில்  நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரை சோதனை செய்தபோது ஒரு பையில் மூன்று குத்து  விளக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.  விசாரணையில் அவர் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதி ராஜ்குமார் (49) என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவரிடம் இருந்தவை பெருமாள் கோயிலில் இருந்து திருடியது என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

Similar News