தடையை மீறி வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்திய நபரால் பரபரப்பு

குலசேகரம் அருகே தடையை மீறி வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-15 11:02 GMT

குலசேகரம் அருகே தடையை மீறி வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


குமரி மாவட்டம் வழியாக தினமும் நூற்றுக்க ணக்கான டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கனிம வளங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் தொடர் சம்பவங்களாக நடந்து வருகிறது.டாரஸ் லாரிகள் மூலம் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. காலை மற்றும் மாலை நேரங்க ளில் டாரஸ் லாரிகள் பய ணிக்க தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டாலும், அதை நடை முறைப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

இதனால் விபத்துக்களும், உயிர் பலிகளும் தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் கோதையார் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் மனைவியுடன் பைக்கில் குலசேகரத்தில் இருந்து திற்பரப்பு நோக்கிவந்துக் கொண்டிருந்தார்.கொல்லாறை பகுதியில் வரும்போது, எதிரே அதி வேகமாக டாரஸ் லாரி ஒன்று வந்து உள்ளது. பேருந்து மற்றும் பள்ளி வாகனங்கள் செல்லும் நெருக்கடியான நேரத்தில் டாரஸ் லாரிகள் ஓடக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து லாரியை தடுத்து நிறுத்திய ஜஸ்டின், குலசேகரம் போலீசில் தகவல் கொடுத் தார்.

ஆனால் போலீசார் வரவில்லை. இதை தொடர்ந்து அவசர போலீசுக்கு தகவல் கொடுத்தார்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் குலசேகரம் ஸ்டேஷனில் இருந்து இரண்டு போலீசார் வந்தனர். பின்னர் அவர்கள் லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News