வீட்டை விட்டு மனைவி சென்றதால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே குடும்ப தகராறில் மனைவி வீட்டை விட்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.;
Update: 2024-04-27 06:02 GMT
காவல்துறை விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை முக மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ்.கொத்தனார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கணவர் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவி கணவனை விட்டுவிட்டு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக பிரின்ஸ் மன வேதனையில் காணப்பட்டார். இந்நிலையில் வீட் டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.