மனநல காப்பக தொழிலாளி மாயம்!
தனியார் மனநல காப்பகத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த பெண் மாயமான நிலையில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-04-09 05:24 GMT
விராலிமலை ஒன்றியம் குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சகாயமணி மனைவி பெமினா பெட்ஷி(52). இவர் ஆவூரில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காப்பகத்துக்கு சென்ற பெமினாபெட்ஷி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி கணவர் அளித்த புகாரின்பேரில் மாத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.