பழ மரக்கன்றுகள் நடும் விழா கலந்து கொண்ட அமைச்சர்!

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-14 06:50 GMT

பழ மரக்கன்றுகள் நடும் விழா கலந்து கொண்ட அமைச்சர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடவாளம் ஊராட்சி கண்டங்காரன்பட்டி கிராமத்தில் பசுமை நிலம் இளைஞர்கள் மற்றும் மரம் அறக்கட்டளை சார்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் முன்னிலையில் நடைபெற்ற பழ மரக்கன்றுகள் நடும் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மு.க. ராமகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட சேர்மன் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் மதியழகன், கவுன்சிலர் கலியமூத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள்சிருமலர் ஞானபிரகாசம், ஆதிஸ்வரன், ஜெய்சங்கர், சதீஷ்குமார் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News