சிறு சமுதாய கூடம் கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்!
காமராஜர் நகரில் சிறு சமுதாய கூடம் கட்டிடத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 07:14 GMT
சமுதாய கூடம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், மேலத்தானியம் ஊராட்சி, காமராஜர் நகரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிறு சமுதாய கூடம் கட்டிடத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.அ.முத்து, ஊராட்சிமன்றத் தலைவர் திரு.முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.