அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர்
வெம்பாக்கத்தில் ரூ .15.39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.
Update: 2024-02-19 07:55 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவ வேலு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் இதனை தொடர்ந்து வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே 15.39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் பின்னர் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு ,மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.