வள்ளளையில் மீனவர் நகைக்கடன் சங்கம் அமைச்சர் துவக்கி வைத்தார். 

வள்ளளையில் மீனவர் நகைக்கடன் சங்கம் அமைச்சர் துவக்கி வைத்தார். 

Update: 2024-01-14 12:12 GMT
நகைக் கடனை துவக்கி வைத்த அமைச்சர்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியில் செயல்பட்ட வந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தை தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் தரம் உயர்த்தப்பட்டு, மீனவ நகை கடன் வழங்க சங்கமாக மாற்றப்பட்டது.

இதையடுத்து 10 லட்ச ரூபாய் மதிப்பில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு , அதன் திறப்பு   நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.        நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் நடராஜன், முன்னாள் வள்ள விளை கூட்டுறவு சங்கத் தலைவர் அருளானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      

 பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கட்டிடத்தை திறந்தார்.  ராஜேஷ்குமார் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து  கடன் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்  துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பங்குப் பணியாளர் ரிச்சர்ட் சர்க்கரியா, தமிழக அரசின் மீனவர் நல வாரிய உறுப்பினர் நீரோடி ஜோஸ் உட்பட பல கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News