கிரிகெட் மைதானம் அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்!

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.

Update: 2024-06-15 07:13 GMT

உதயநிதி ஸ்டாலின்

கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என கடந்த நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது பொறுப்பு அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜா X வலைதளம் மூலம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.அமைச்சரின் கோரிக்கையை ஏற்று கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்ப்பதாகவும் தெரிவித்தார்.தொழில்துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்று இந்த வாக்குறுதியை அளிப்பதாகவும் சென்னையில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் போல கோவையிலும் உலக தரத்தில் மைதானம் அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.இந்த நிலையில் கோவையில் நாளை முப்பெரும் விழா நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்கள் கோவையில் முகாமிட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க கோவைக்கு வருகை புரிந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டார். ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தியவர் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் கருத்துகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது அமைச்சர் முத்துசாமி டிஆர்பி ராஜா மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News