கோவில் சுற்றுச்சுவருக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டல்
கோவில் சுற்றுச்சுற்றுச்சுவர்க்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-146, மதுரவாயல், அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயில் ரூபாய் 73.76 இலட்சம் மதிப்பீட்டில்,
திருக்கோயில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு பூஜை மற்றும் ரூபாய் 39.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில் அலுவலகம் மடப்பள்ளி மற்றும் தரைதளம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர்பாபு,
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு அடிக்கல் பூஜை செய்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இணை ஆணையர், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பொது நலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.