திமுக கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்

பெரம்பலூரில் திமுக கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போக்குவரத்து துறை அமைச்சர்.;

Update: 2024-02-17 11:00 GMT
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் இல்லம் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதனை தொடர்ந்து துறைமங்கலம் பகுதியில் உள்ள பெரம்பலூர் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜுடு என்கிற பொன்.கோவிந்தராஜ் இல்லம் சென்று அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார். இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள். உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News