தொடர் மழையால் நிரம்பி வரும் முக்கடல் அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.2 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2024-06-30 06:23 GMT
குமரி முக்கடல் அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் மலையோர பகுதிகள் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காணப்படுகிறது.       நேற்று மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை மற்றும் சில பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. நேற்று அதிகபட்சமாக முள்ளங்கினா விளையில் 22.6 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. மழை காரணமாக மாவட்டத்தில் மேலும் மூன்று வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.    

  தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருக்கின்றன. இதில் குறிப்பாக நாகர்கோவில் மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் 25 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் தற்போது 22.2 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து காரணமாகவும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் அணை நீர்மட்டம் உச்சநீர் மட்டத்தை எட்டிய நிலையில் உள்ளது. இதனை போன்று மாம்பழத் துறையாறு  அணையிலும் மற்றும் அணைகளிலும் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது.

Tags:    

Similar News