பொள்ளாச்சி சோமசுந்தராபுரம் குடியிருப்பு பகுதிகளில் தேசிய பறவையான மயில் உயிர் இழப்பு
பொள்ளாச்சி சோமசுந்தராபுரம் குடியிருப்பு பகுதிகளில் தேசிய பறவையான மயில் உயிர் இழப்பு - தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த மயிலை மீட்டு நல்லடக்கம் செய்தனர்.;
Update: 2024-03-10 08:23 GMT
மயில் உயிர் இழப்பு
பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள 24.வது வார்டில் சோமசுந்தராபுரம் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி சுற்றி வந்த நமது தேசிய பறவையான மயில் ஒன்று உயிரிழந்து உள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மயில் உயிரிழந்ததை பற்றி விசாரித்த ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி உத்தரவின் பேரில் உயிரிழந்த நமது தேசிய பறவையான மயிலின் உடலை மீட்டு வேட்டை தடுப்பு காவலர் கணபதி என்பவர் மயிலை நல்லடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.