புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு
மயிலாடுதுறையில் நாளை தமிழக முதல்வரால்திறப்பு விழா கணக்கு இருக்கும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைச்சர் ஏவ வேலு ஆய்வு மேற்கொண்டார்
Update: 2024-03-03 05:09 GMT
மயிலாடுதுறையில் ரூ.114 கோடி திட்ட மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக 7 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை (மார்ச் 4ல்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இருந்தனர்.