தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. பொது வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

Update: 2024-01-09 05:58 GMT
தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் சூழலில், கரூர் மாவட்டத்தில் காலை முதலே விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு வெளியில் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பொது வாகனங்களில் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகும் குற்றச்சாட்டு உள்ளது.
Tags:    

Similar News