கவனத்தை திசை திருப்பி கைவரிசை - ரூ.5.30 லட்சத்தை பறிகொடுத்த முதியவர்

ஒசூர் அருகே முதியவரின் கவனத்தை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் இருந்த 5.30 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-08 06:39 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பெரிய சப்படி கிராமத்தை சேர்ந்த முனுசாமி(60) என்பவர்.. சூளகிரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து, 5.30 லட்சம் ரூபாய் பணத்தை தனது டிவிஎஸ் XL வாகனத்தின் முன்பக்கமாக வைத்துக்கொண்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது ஊருக்கு சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் தாள்களை சாலையில் வீசி, உங்கள் பணம் சிதறி கிடப்பதாக முனுசாமியிடம் கூறி உள்ளனர்.. அதிர்ச்சியடைந்த முனுசாமி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் விழுந்த பணத்தை எடுக்க முயன்றபோது XL வாகனத்தின் முன்பக்க கவரில் இருந்த 5.30 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.. அப்போது தான் முனுசாமி தனது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி சென்றதை அறிந்து பேரதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார். இதுக்குறித்து சூளகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News