சீட்டு நடத்தியவர் தலைமறைவு - காவல் நிலையத்தில் புகார்
ஆம்பூரில் தினமும் சீட்டு பணம் கட்டி வந்தால் வட்டி பணம் மற்றும் குலுக்கல் முறையில் வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
Update: 2024-01-21 03:35 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரகிராம பகுதிகளில் உள்ள பெண்களிடம் வாணியம்பாடி பகுதியை விமல்ராஜ் என்பவர் தினமும் 1 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தினமும் சீட்டு கட்டி வந்தால், தினமும் வட்டி பணம், மற்றும் குலுக்கல் முறையில் வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார், இதனை தொடர்ந்து , கடந்த சில நாட்களாக விமல்ராஜ் குறித்து எவ்வித தகவலும் இல்லையெனவும், அவர் அளித்த முகவரி போலியானது எனவும், அவரது செல்போன் எண் உபயோகத்தில் இல்லாததாலும்,தங்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த விமல்ராஜ் மீது ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.