வீட்டில் நகையை திருடியவர் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் , அணைத்தலையூர் காலணியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Update: 2024-01-04 10:04 GMT
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூர் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் திருப்பாச்செல்வி. இவர் கடந்த 29ஆம் தேதி வெளியே சென்று திரும்பியபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2.5 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பரமேஸ்வரன் என்பவரை இன்று கைது செய்து அவரிடம் நகை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.