ஊர் கவுண்டரை தாக்கிய மர்ம நபர்கள் காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டரை தாக்கிய மர்ம நபர்கள் தர்மபுரி நகர காவல் துறையினர் விசாரணை;
Update: 2024-06-15 06:31 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவர் ஊர்கவுண்டர் ஆவர், நேற்று தனது மனைவியை, ஒகேனக்கல்லுக்கு உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக பேருந்தில் அனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து, தான் வருவதாக வருவதாக கூறினார். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடிய போது, வெண்ணாம்பட்டி மயானத்தில் ரத்த காயங்களுடன் கோவிந்தராஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.