காரைக்குடியில் கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்
காரைக்குடியில் கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் காவல்துறை ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் போக்குவரத்து அதிகமுள்ள முதல் பீட் சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறி கிடந்து உள்ளது. இதனை பார்த்த காரைக்குடி நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பழ கடை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து சேகரித்ததில் ரூ 16 ஆயிரம் கிடைத்தது. யாரேனும்,
இந்த வழியாக தவறவிட்ட பணத்தின் எண்ணிக்கையை சரியாக கூறினால் இந்த பணத்தை கொடுங்கள் என்று அனைத்து பணத்தையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சிறிது நேரத்திலேயே சாலை ஓரமாக தார்பாய் வியாபாரம் செய்யக்கூடிய
உத்தரப்பிரதேச மாநிலத்தை சார்ந்த ரியாசத் என்பவர் தான் செகன்ட் பீட்டில் அருகில் உள்ள கனரா வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்ற பணம் தவறி எங்கோ விழுந்து விட்டது என்று விசாரித்து கொண்டிருந்ததார். அங்கிருந்தவர்கள் ரியாசத்தை அழைத்து, அவரிடம் உண்மை தகவலை விசாரித்து, பின்னர் காரைக்குடி தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து காவலர்கள் முன்னிலையில் சாலையிலிருந்து,
எடுக்கப்பட்ட ரூபாய் 16 ஆயிரத்தை ஒப்படைத்தனர். தான் உழைத்த பணம் கிடைத்ததற்கு அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.