காவல்கட்டுப்பாட்டறை 24மணி நேரமும் இயங்கும்

மயிலாடுதுறையில் பேரிடர்மீட்பு குறித்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டறை 24 மணி நேரமும் இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-03 15:14 GMT

பேரிடர் மீட்பு குழுவினர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பருவ மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு குறித்து, மயிலாடுதுறை மக்கள் பயன்பாட்டிற்கு 24 மணி நேரமும், காவல் கட்டுப்பாட்டறை ,இயங்கி வருகிறது . பொதுமக்கள் 944 2626792 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் . மீட்பு பணிக்காக, பேரிடர் மீட்பு படையை சேர்ந்த, 65 காவலர்களும், அதிவிரைவு படையைச் சேர்ந்த 9 குழுக்களும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களும், தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் சாலைகளில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். சாலையில் அறுந்து கிடக்கும் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, தொட வேண்டாம் என , மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News