போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கர்நாடகா போலீசார் வாங்கியதாக கூறி நகைக்கடை அதிபரை பிடித்ததால், திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-14 13:08 GMT

கர்நாடகா போலீசார் வாங்கியதாக கூறி நகைக்கடை அதிபரை பிடித்ததால், திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூர் நகைக்கடை பஜாரில் கர்நாடகா போலீசார் வாங்கியதாக கூறி நகைக்கடை அதிபரை பிடித்ததால் நகைக்கடை வியாபாரிகள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் டபேத்தார் முத்துசாமி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் காங்கிரஸ் கட்சியில் திருப்பத்தூர் மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவர் திருப்பத்தூர் நகைக்கடை பஜாரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் கர்நாடகா மாநில கே ஜி எஃப் பகுதி இன்ஸ்பெக்டர் நவீன் குமார் என்பவர் கடைக்கு வந்து உங்கள் கடையில் அரை கிலோ தங்கத்தை விற்பனை செய்து உள்ளார்கள் அந்த தங்கத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் தான் வாங்கவில்லை அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார். உடனடியாக திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை அழைத்து வந்து இவர்தான் உங்கள் கடையில் விற்பனை செய்தார் என்று தெரிவித்துள்ளார் இவரிடம் கேளுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு சதீஷ் தங்களிடத்தில் நகையை விற்பனை செய்தேன் என்று தெரிவித்ததன் பேரில் போலீசார் அவரை கர்நாடகாவிற்கு அழைத்துச் செல்ல அழைத்தனர். இதனை அறிந்த திருப்பத்தூர் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து அடிக்கடி கர்நாடகா போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாங்காத நகையை வாங்கியதாக கூறி நகைக்கடை உரிமையாளர்களை நிர்பந்திருக்கின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகைக்கடை பஜாரில் இருந்து ஊர்வலமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு வந்த டிஎஸ்பி செந்தில் கர்நாடகா போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் பெங்களூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் பல்வேறு பகுதிகளில் வீடு கடை உள்ளிட்டவைகளை நகையை திருடியுள்ளார். இவரது மைத்துனர் ஆன திருப்பத்தூர் சடையனுர் பகுதியை சேர்ந்த சதீஷிடம் கொடுத்து வெங்கடேசன் இடம் விற்பனை செய்து உள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இவரிடம் நகையை பறிமுதல் செய்ய வந்தோம் என்று தெரிவித்துள்ளனர. அதற்கு டிஎஸ்பி செந்தில் வெளி மாநிலத்திலிருந்து காவல்துறையினர் வரும்பொழுது குறிப்பாக அந்த மாவட்ட போலீசாருக்கும் அந்த பகுதி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் நீங்கள் தகவல் தெரிவிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கேட்டார்.

அதற்கு கர்நாடக போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவரிடம் வெங்கடேஸ்வரிடம் விசாரணை செய்ததில் இதுபோன்ற நபரிடம் இருந்து நான் எந்த நகையும் வாங்கவில்லை என்று தெரிவித்தார் எனவே கர்நாடகா போலீசார் விசாரணைக்காக நாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனு எழுதி காவல் நிலையத்தில் அளித்தனர் அதன் பெயரில் அவரை கே ஜி எஃப் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News