வாக்குசாவடி அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர்

பாபநாசத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நீண்ட வரிசையில் நின்று தபால் வாக்குகளை செலுத்தினார்கள்.;

Update: 2024-04-08 07:04 GMT

தபால் வாக்குகள்

பாராளுமன்ற பொது தேர்தல் 2024-முன்னிட்டு மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாபநாசம் சட்ட மன்றத் தொகுதிக்கான தேர்தல் பணியாளருக்கான பயிற்சி வகுப்பு தலைமை வாக்கு பதிவு அலுவலர், 1, 2, 3, 4 வாக்கு பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி பாபநாசம் ஆர்.டி.பி கலை, அறிவியல் கல்லூரியில் நடந்தது. மேற்கண்ட அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சியளித்தனர். காலை முதல் மாலை வரை நடந்த பயிற்சியில் 1476 பேர் பங்கேற்றனர்.

Advertisement

இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து வடிவேல், தஞ்சாவூர் மாவட்ட திட்ட இயக்குநர் பால கணேஷ், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து கிருஷ்ணன், பாபநாசம் தாசில்தார் மணி கண்டன், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் முருககுமார் வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் உட்பட பங்கேற்றனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடி அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 310 பேர் கலந்துகொண்டு தபால் வாக்கினை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News