எலுமிச்சம் பழம் விலை கிடுகிடு உயர்வு
வெயில் தாக்கத்தின் காரணமாக எலுமிச்சம்பழம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.
Update: 2024-04-29 15:47 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் எலுமிச்சம் பழம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் தற்போது கொளுத்தி வருகிறது . இதன் காரணமாக பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் இயற்கை பானங்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜூஸ் விற்பனை செய்யும் கடைகளில் எலுமிச்சம்பழம் விலை ஏற்றத்தின் காரணமாக கணிசமாக எலுமிச்சம் பழம் ஜூஸ் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் எலுமிச்சம் பழம் வியாபாரம் செய்து வரும் பெண்மணி கூறும் பொழுது தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதால், எலுமிச்சம்பழம் வரத்து மிகவும் குறைவாக உள்ளது ,சேலத்திலிருந்து அதிகளவு எலுமிச்சம் பழம் வரும் தற்போது வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொளுத்தும் வெயில் மட்டுமே. இதனால் போதிய அளவு எலுமிச்சம் பழங்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. மேலும் மிக சிறிய அளவிலான பழம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஜூஸ் கடைகளில் மக்கள் எலுமிச்சம் பழம் ஜூஸ் கேட்கும் பொழுது விலை கட்டுப்படியாகாது என்பதால் பெரும்பாலான வியாபாரிகள் சமீபமாக எலுமிச்சம் பழம் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் விலை அதிகரிப்பாலும் பொதுமக்களும் எலுமிச்சம் பழம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிலைமை சரியாகும் போல் உள்ளது என தெரிவித்தார். சராசரி அளவில் உள்ள ஒரு எலுமிச்சம் பழம் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரத்து குறைவு, டிமாண்ட் அதிகரிப்பு காரணமாக 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..