தண்ணீர் திறக்க கோரி உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி போராட்டம்

உப்பாறு விவசாயிகள் அணையின் உட்பகுதியில் இறங்கி வெயிலில் அமர்த்து 100க்கும் மேற்கொண்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-02 00:56 GMT

திருப்பூர்தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., திட்டத்தில் உபரி நீரைத் திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் தற்போது அணையின் உட்பகுதியில் இறங்கி வெயில் அமர்த்து 100.க்கும் மேற்கொண்டார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்தில் அரசன் முன்னிலையில் பொதுப்பணித்துறை உடுமலை பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், மற்றும் காஞ்சிதுரை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன். தாராபுரம் குண்டடம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் திருப்பூர் உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார். துணைத் தலைவர் குணசேகரன், ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் உள்ளதாகவும் அதனை வழங்குவதற்கு சட்டமுறைப்படி உத்தரவு பிறப்பித்து அதன் பிறகு வழங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை உப்பாறு பாசன விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இதனால் போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இன்று உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வில்லை இதனால் மீண்டும் ஆவேசமடைந்த விவசாயிகள், உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி அங்கு வெயில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாய்களுக்கும் தற்போது வாக்க்வாதம் எற்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணைபகுதியில் பரபரப்பு. அணைக்கு தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News