ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் !

மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-07-12 05:25 GMT

போராட்டம்

மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை செல்லும் சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இதற்காக அண்ணா நகர் பகுதிகளில் அறிவிப்பு இல்லாமல் வீடுகளை அகற்றி வருகின்றனர். அண்ணா நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் அளவீடு செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Advertisement

ஊராட்சித் தலைவர் தான் சர்வீஸ் சாலை தேவை எனக்கூறியதாக பொதுமக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை 11 மணியளவில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் நேரில் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர்.

Tags:    

Similar News