நாகர்கோவில் சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளை அகற்றம்

நாகர்கோவில் சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2024-05-09 08:51 GMT
சாலையோரம் நடப்பட்டிருந்த செடிகளை , தடுப்பு வேலிகளை சேதப்படுத்தப்பட்டன

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோணத்திலிருந்து அனந்தன் பாலம் செல்லும் வழியில்  புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அருகே  செல்லும் அனந்தனார் கால்வாய் கரையோரம்  வடக்கு கோணம் பகுதி இளைஞர்கள் சார்பில் அரளி மற்றும் மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நார்த்தங்காய், சப்போட்டா போன்ற பழம் தரும் மரம் செடி கொடிகள் நடப்பட்டிருந்தது.    

   இளைஞர்களின் சொந்த செலவில் நடப்பட்ட இந்த மரங்களுக்கு கால்நடைகளால் ஆபத்து ஏற்படாத வகையில் பிளாஸ்டிக் கம்பி வேலிகளால் பாதுகாத்து காலை மற்றும் மாலையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இதனால் கோடையிலும் இந்த செடி கொடிகள் செழிப்பாக வளர்ந்தது.    

இந்த மரக்கன்றுகளை எந்த முன்னறிவிப்பு இன்றி நேற்று முன்தினம் மூன்று பேர் பிடுங்கி எறிந்தனர்.  இதுகுறித்து அப்பகுதி  இளைஞர்கள் கேட்டபோது அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாகவும் ரோட்டோரம் பழம், நிழல் தரும் மரம் செடி, கொடிகளை நடக்க கூடாது எனக் கூறி வலைகளை அறுத்து எரிந்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதி  முழுவதும் பரவியதால்,

பொதுமக்கள் அங்கு குவிந்தனர். ஆனால் பொதுப்பணித் துறையில் இருந்து வந்திருப்பதாக கூறிய மூன்று பேரும் சுமார் 30க்கும் மேற்பட்ட மரம் செடி கொடிகளை இரும்பு வேலியுடன் பிடுங்கி எறிந்து விட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்போவதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News