திடீரென வீசிய காற்றில் பறந்தது வீட்டின் மேற்கூரை
மணப்பாறை அருகே திடீரென வீசிய சுழல் காற்றில் வீட்டின் மேற்கூரை 500 மீ., தூரத்துக்கு பறந்தநிலையில், அங்கிருந்த முதியவர் ஒருவர் காயமடைந்தார்.;
Update: 2024-01-11 03:57 GMT
மணப்பாறை அருகே திடீரென வீசிய சுழல் காற்றில் வீட்டின் மேற்கூரை 500 மீ., தூரத்துக்கு பறந்தநிலையில், அங்கிருந்த முதியவர் ஒருவர் காயமடைந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வலையபட்டியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் ராஜூ (70) என்பவரது ஆஸ்பெட்டாஸ் வீட்டின் ஓடுகள் காற்றில் பறந்தன. சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வீட்டின் ஓடுகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் பறந்து சென்று விழுந்தன. மரங்கள் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதில் வீட்டில் இருந்த ராஜூ மற்றும் அவரது பேரக்குழந்தைகள் இருவர் காயமடைந்தார். இதில் ராஜூ மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.