பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்
அனந்தபுரத்தில் பொதுமக்களுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மரக்கன்று வழங்கினர்.;
Update: 2024-06-08 09:42 GMT
அனந்தபுரத்தில் பொதுமக்களுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் மரக்கன்று வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம்,அனந்தபுரத்தில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் கடை வீதியில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சிக்கு, முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முரளி மரக்கன்று வழங்குவதை துவக்கி வைத்தார்.ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங், முன்னாள் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் செயலாளர் அலில், நிர்வாகிகள் நடேசன், சம்பத், கிருபா, சீத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.