பச்சை பச்சை நிறமாக காட்சியளித்த கடல்

Update: 2023-11-07 12:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற் பகுதியில் கடற்கரை அருகே அமைந்துள்ள தனியார் மீன் அரவை மற்றும் ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேறிய கழிவு காரணமாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை பச்சை நிறமாக மாறிய கடல் கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற் பகுதியில் சிங்கி இறால் கூண்டு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை திடீரென கடல் முழுவதும் பச்சை நிறமாக மாறி உள்ளது.

மேலும் கடற்கரை ஓரத்தில் கடலில் இருந்து ஏராளமான முரல் ,சிங்கி இறால், ஊழி கணவாய் மீன்கள் செத்து ஒதுங்க துவங்கி உள்ளன. இதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கூறுகையில், தருவைகுளம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான மீன் அறவை நிலையம் மேலும் ரசாயன ஆலைகளில் இருந்து மழைக்காலங்களில் கடலில் கழிவுகளை கலப்பதால்,

இவ்வாறு கடல் பச்சை நிறமாக மாறி இருக்கலாம் மேலும் மீன்கள் செத்து ஒதுங்கும் நிலையும் ஏற்பட்டிருக்கலாம் எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் ஆய்வு செய்து கழிவுகளை கலக்கும் தனியார் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News