குடிபோதையில் தாயிடம் தகராறு: தந்தை கொலை
திருமழிசை அருகே தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமழிசை நாலுத்தொன்னு தெருவைச் சேர்ந்தவர் பாபு, (49). கார்பெண்டர் வேலை செய்து வரும் இவருக்கு தேவி என்ற மனைவியும், தமிழரசன், 24 திரிஷா என்ற மகன், மகள் உள்ளனர். தமிழரசன் திருமழிசை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பாபு மது அருந்தி விட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டியுள்ளார். அப்போது தமிழரசன், தந்தையிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் தந்தை, மகனுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழரசன் தந்தையை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். வெள்ளவேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து தமிழரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.