தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆசிரியர், ஆட்சியரிடம் மனு

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரை பள்ளியில் வைத்து தாக்கிய, தகப்பனார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Update: 2024-02-13 06:10 GMT
பெரம்பலூர் மாவட்டம், பள்ள காளிங்கராயநல்லூர் அரசு பள்ளி ஆசிரியரான தயாளன் 56, இவர் பிப்ரவரி 12ஆம் தேதி தனது மனைவியுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தார், அதனைத் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், கொனலை கிராமத்தைச் சேர்ந்த தகப்பனார் ஆரோக்கியசாமி ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியரான இவருக்கு 2018 - 19 ஆம் ஆண்டுகளில் உடல்நிலை சரியில்லாத போது கோமா நிலையில் இருந்தார். அப்போது அவரை 5 லட்சம் வரை செலவு செய்து காப்பாற்றினேன் அவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது தனக்கு செலவு செய்த தொகையும், குடும்ப சொத்தில் ஒரு பகுதி எழுதி தருவதாகவும் உறுதி அளித்தார், ஆனால் அவர் வீடு திரும்பிய நிலையில் தற்போது பணத்தையும் தராமல் சொத்தை எழுதி தராமல், அரசு வேலையில் நல்ல சம்பாதிக்கிறாய் உனக்கு ஏன் பணம் என்று கேட்டு திட்டி உள்ளார் வெளியில் கடன் பெற்று சிகிச்சை செய்ததாகவும் செய்த பணத்தை கேட்ட போது, தான் வேலை செய்யும் பள்ளிக்கு வந்த தனது தகப்பனார் ஆரோக்கியசாமி மற்றும் கொணலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மூணு பேருடன் பள்ளிக்கு வந்து தன்னை சட்டையை பிடித்து இழுத்து மாணவர்கள் முன்னிலையில், தாக்கியுள்ளதாகவும், மேலும் மாணவர்கள் முன்னிலையில் கொலை மிரட்டல் விடுத்து, சென்றனர். இவர்கள் மீது குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் தன்னை, மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அவமானப்படுத்தி அடித்து உதைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News