மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்!
இலுப்பூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.;
Update: 2024-06-02 08:18 GMT
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொடையான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர்கள் காவல்துறையினரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் வாகனத்தை கைப்பற்றி தப்பி ஓடியவர்களை இலுப்பூர் காவல்துறையினர்தேடி வருகின்றனர்.