ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தொழிற்சங்கத்தினர் கைது

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-16 08:35 GMT

மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் , விவசாய விரோத கொள்கைகளை அமுல்படுத்திய பாஜக அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்திட கோரியும், விவசாயிகளுக்கு விதை உரம், மற்றும் மின்சாரத்திற்கான மானியத்தை அதிகப்படுத்திடகோரியும், 100 நாள் பணியை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு 600 கூலி வழங்கிடகோரியும், ஊராக உள்ளாட்சி மற்றும் துப்பரவு உள்ளிட்ட துறைகளில் கான்ட்ராக்ட் முறையை தவிர்த்து நேரடி வேலை வழங்கிடகோரியும், அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்பினர், 30க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி கனரா வங்கி அருகில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர், பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்து மூலம் தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்...
Tags:    

Similar News