அடியாட்களை வைத்து வீட்டை காலி செய்த கந்துவட்டி கும்பல்
கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு அடியாட்களை வைத்து கந்துவட்டி கும்பல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரம்காலணி சி எஸ் நகரைச் சார்ந்த ஓய்வு பெற்ற சுங்கத்துறை கண்காணிப்பாளர் சி.ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப அவசர தேவைக்காக மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவரிடம் வட்டிக்கு ரூபாய் இருபத்தைந்து லட்சம் வாங்கியிருந்தார்.
வாங்கிய கடனுக்கு ஈடாக தனது பெயரில் உள்ள 1.50 கோடி மதிப்புள்ள வீட்டை ,சிங்கராஜின் கட்டாயத்தின் பேரில் செக்யூரிட்டிக்காக கிரயமாக பதிந்து கொடுக்கவேண்டும் என்றும், பத்து மாதத்தில் அசலும் வட்டியும் திரும்ப கொடுக்கும் பட்சத்தில் மேற்படி கிரயத்தை ரத்து செய்துவிடுவதாக சிங்கராஜ் கூறியதாகவும்,தற்போது பத்து மாதம் ஆகிவிட்டது என்றும் வாங்கிய கடனுக்கு கந்துவட்டி கணக்கில் 1.50 கோடி வீடு சரியாகிவிட்டது என்று சிங்கராஜ் கூறி ராஜேந்திரனை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக அடியாட்களை வைத்து அடித்து வெளியேற்றிவிட்டு வீட்டை அபகரிக்க செய்ததால் ராஜேந்திரன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது முதலமைச்சர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு புகார் மனு அனுப்பியதாகவும்,இன்று காவல்துறை ஆணையாளரிடம் நேரில் புகார் மனு கொடுத்து ,சிங்கராஜ் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும்,தனது வீட்டை பாதுகாத்து தருமாறும் மேற்படி ராஜேந்திரன் தனது மனைவியுடன் புகார் மனு ஒன்றினை ஆணையாளரிடம் கொடுத்துள்ளார்.