விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் பலி
திருச்சி மாவட்டம், இலுப்பூர் அரசு மருத்துவமனையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-11 12:12 GMT
தற்கொலை
திருச்சி மாவட்டம், பூவப்பட்டியை சேர்ந்தவர் நல்லு இவரது மனைவி லட்சுமி இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நல்லு வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் இலுப்பூர் சேர்ந்த செல்வி என்பவர் லட்சுமிக்கு போன் செய்து நல்லு அதிக அளவில் மது குடித்து இருந்ததாகவும் இதனால் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நல்லு விஷமருந்திய நிலையில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்