400 வருடங்களுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத வெள்ளகெவிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திண்டுக்கல் மாவட்டம், வெள்ளகெவி கிராமத்தின கரடு முரடான பாதையில் பொதி சுமக்கும் குதிரை மூலம் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது.

Update: 2024-04-18 12:13 GMT

பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவில் அடர்ந்த வனப் பகுதிகளின் நடுவே அமைந்துள்ளது வெள்ளகெவி கிராமம், இந்த கிராமத்திற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லை, மேலும் இந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஓட்டுப் போடுவதற்கு அந்த கிராமத்திலேயே வாக்குச்சாவடி உள்ளது, இந்த கிராமத்தில் 137 ஆண் வாக்காளர்களும், 127 பெண் வாக்காளர்களும் சேர்ந்து மொத்தம் 264 வாக்காளர்கள் உள்ளனர்,

இங்குள்ள வாக்குசாவடிக்கு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவிற்கு இன்று வாக்குப் பதிவு இயந்திரங்களை பொதி சுமக்கும் குதிரையின் மூலம் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடி அலுவலர்கள் கொண்டு சென்றனர், மேலும் வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாக திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்புக் காவலர்களும், இவர்களைத் தொடர்ந்து வாக்குச் சாவடி அலுவலர்கள் 6 நபர்களும் சென்றனர், நாளை வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வெள்ளக்கெவி கிராமத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை பெரியகுளம் வழியாக திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்படும் என வாக்குச் சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News