குடியாத்தம் அருகே கடையில் திருட முயன்ற நபரை விரட்டி அடித்த பெண்கள்
குடியாத்தம் அருகே பலகார கடையில் திருட முயன்ற நபரை பெண்கள் துடைப்பதால் அடித்து விரட்டி அடித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 14:01 GMT
கடையில் திருடும் நபர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே குடியாத்தம் பலகாரம் என்ற பெயரில் தின்பண்ட கடை செயல்பட்டு வருகிறது.இங்கு பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த சனிக்கிழமை பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது கடைக்குள் வந்த பெண் ஊழியர்கள்,
திருட வந்த மர்ம நபரை துடைப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர்.இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.