மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு !
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-04-06 08:54 GMT
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூர் வைத்தியக்காரன் காட்டை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர், கட்டிட சென்டிரிங் தொழிலாளி. இவர், நேற்று மாலை 4 மணி அளவில் பனங்காட்டில் மோட்டூரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். அவர் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரவி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.