முதியவரை தோளில் சுமந்து தீமிதி உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம், பாலையூர் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-07 07:32 GMT

தீமிதி திருவிழா 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பாலையூர் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இவ்வாலயத்தில் சித்திரை பெருவிழா கடந்த மாதம் 30ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா மற்றும் பால்குடம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது ‌. இந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர். பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து 67 வருடங்களாக தீ மிதித்த முதியவர் ஒருவர் தனது கால்கள் முடியாத சூழ்நிலையிலும் தீ மிதித்து ஆகவேண்டும் என்று கோவிலில் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதிக்க வந்தார். முதியவரால் நடக்க முடியாத சூழ்நிலை இருந்ததால் பக்தர் ஒருவர் அவரை தோளில் சுமந்தபடி தீ மிதித்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் கூண்டு காவடிகள் தீமிதித்த நிலையில் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய மகா மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News