தாது மணல் கம்பெனியில் திருட்டு: 2பேர் கைது

ஆத்தூர் அருகே தாதுமணல் கம்பெனியில் காப்பர் வயர்களை திருடிய சிறுவன் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-05 16:50 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் கிராமத்தில் தாதுமணல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தொழிற்சாலையின் காம்பவுண்ட் சுவரை உடைத்து மர்ம நபர்கள் அங்கிருந்த காப்பர் வயர், காப்பர் தகடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.  இதுகுறித்து அந்நிறுவனத்தின் மந்திரம் மகன் மேனேஜர் மாணிக்கம் (36) என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி தலைவன்வடலி கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்த தேவேந்திர குமார் மகன் பொன் சரண் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2பேரை கைது செய்து, பைக் மற்றும் காப்பர் வயர்களை பறிமுதல் செய்தார். இது தொடர்பாக மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News