வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
விருதுநகர் யானைக் குழாய் தெருவில் வசித்து வருபவர் உண்ணாமலை தாய் (78). இவருடைய மகள் விருதுநகர்- சிவகாசி சாலையில் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு உண்ணாமலை தாய் மகள் வீட்டில் தங்கி உள்ளார். இன்று அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உண்ணாமலை தாய் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் துணிகள் வைக்கும் ட்ரம்முக்குள் வைத்திருந்த 18 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.